லஞ்சம் எனப்படும் கையூட்டு இங்கே எங்கும் லஞ்சம் எதிலும் லஞ்சம் காரியம் சாதிக்க கொடுக்கும் லஞ்சம் அதை முடிக்க வாங்கும் லஞ்சம் கடையூழியர் முதல் உயரதிகாரி வரை அரசும் தனியார் நிறுவனமும் எங்கேயும் காசின் மேல்தான் கவனம் தினமும் கொடுத்தால் தான் வேலை முடியும்
கொடுப்பதும் குற்றம் வாங்குவதும் குற்றம் கொடுப்பவரும் உடந்தையே லஞ்ச ஊழலுக்கு கொடுப்பதை மறுத்தால் வாங்கும் நிலையிராது இருவரையும் தண்டிப்பதே முறையாகும் என்பேன்.
கொடுக்கவில்லை எனில் காரியமும் முடியாது அப்படியே முடிந்தாலும் அது தாமதமாகவே வேலை வாங்கும் உயர் அதிகாரிக்கும் தட்டிக் கேட்கும் தணிக்கை யருக்கும்
மந்திரிகட்கும் முதல்வருக்கும் பிரமுகர் கட்கும் சிறைப் பிடிக்கும் காவலருக்கும் ஆய்வாளருக்கும் வாதாடும் வக்கீல்கட்கும் தீர்ப்பு வழங்கும் நீதிபதிக்கும் சில்லரை சென்றால் ஜெயமே.
இருப்பவர் கொடுப்பார் இல்லாதோர் என்செய்வர் எம்தேசத்தின் இந்நிலை மாறுவது எப்போது கீழிருந்து மேல்வரை கடும் தண்டனை மிகவும் அவசியம் இங்கே இப்போது.
என் கவிக்கொரு கருவும் அவள் தானே பண் இசைக்கும் குயிலும் அவள் தானே நடை தவழும் தமிழினி யவள் தானே எனை ஆளும் இனிமையு மவள் தானே
நற் கனிவாய் எனையே ஈர்த்தவள் தான் சொற் சுவையால் என்னில் இனித்தவள் தான் மனம் நிம்மதி கொள்ளலும் அவளால் தான் தினம் சன்னதிச் சங்கீதம் அவளிடம் தான்
இனி ஆயிரம் பிறப்புகள் நான் அடைந்தாலும் கனி அவள் மடியினில் என் அடைக்கலமே விண்ணில் சென்று நான் உறைந்து விட்டாலும் என்னில் தாங்கி சுகமாய் என்றும் சுமப்பேனே.