Sunday, October 3, 2010

எழுதுகோல் இயங்கி.



கோடி கோடி
கோப்புகள் அடக்கி
நொடிகளில் திரையில்
சரியாய் தொனிக்கும்
உலகம் யாவிலும்
அத்தியாவசியமாம்
சிறிய சக்திமான்

எழுதுகோல் இயங்கி.

Saturday, October 2, 2010

என்று தமிழ் நம் இரத்தமாகும்?

ஆங்கிலன் வந்து

ஆக்கிரமித்தான்

அன்னியன் ஆனோம்

அனைவரும் நாம்.


ஆங்கிலம் புகுத்தியெம்

அழகுத் தமிழை

அழுக்கு படுத்தி

அசிங்கம் செய்தான்.


அவன்னாவில்ஏறா

பெயர்களை எல்லாம்

கூறுபிரித்து கொச்சையாக்கி

கொன்று திரித்தான்.


அழுக்குப் பிள்ளையாய்

திரிந்த பெயர்களை

இன்பம் இதுவென

மொழிந்து மகிழ்ந்தோம்.


கொஞ்சம் கொஞ்சமாய்

இழையோடிய அன்னியன்

மொழிதனை அள்ளிப்பருகி

வியிறு நிரப்பி உண்டு மகிழ்ந்தோம்


பைந்தமிழ் செந்தமிழ்

மறந்து போச்சு

நற்றமிழ் நாவினில்

தீர்ந்து போச்சு


ஏதோ ஒரு சிலர்

பேசும் நம் தமிழ்

கேட்டு நகைக்கும்

நிலையும் இங்கு வந்தாச்சு.


புசித்த தாய்ப்பால்

போலியாச்சு

பசித்த வயிற்றுள்

கிறுமியின் ஆட்சி.


என்று கழுவி சுத்தமாகும்?

என்று தமிழ் நம் இரத்தமாகும்?