Monday, March 9, 2015

அகமுடைத்தாள்

அகமுடைத்தாள்
என்னகமுடைத்தாள்
முகமூடியணிந்தே
என்னகமுடைத்தாள்
அகந்தனிலகந்தை கொண்டே
முகந்தனில் முறுவலித்தே
என்னகமுடைத்தாள்.
மலரம்புதனை எய்தி
தினமென்னைத் தின்றுவிட்டு
இனம்கண்டு சேர்ந்துகொண்டு
என்னகமுடைத்தாள்
குணந்தனைக் குப்பையிட்டே
மனந்தனைத் திரையிட்டு
என்னகமுடைத்தாள்
அகமுடைத்தாள்.

என்னுணர்வுகளை



என்னுணர்வுகளைக்
கொன்று தின்றுப்
பறந்து சென்ற உனக்கும்

பிணம் தின்னிக்
கழுகுக்கும் பெரிதாய்
வித்தியாசம் ஏதுமில்லை.


‪#‎நீலா

கோலங்கள் மாறும்



கோலங்கள் மாறும்
காலத்திற்கேற்ப...

காலங்கள் மாறும்
சூழ்னிலைக்கேற்ப...


காதல் மாறுவது
எதற்கேற்ப...???

‪#‎நீலா

ஒளித்து வைக்கின்றேன்



ஒளித்து வைக்கின்றேன்
துளிர்த்து வளர்ந்த காதலை.
கண்டு கொண்டு வராதீர்...
துவண்டு விடும் என்னிதயம்.


‪#‎நீலா‬

அதை மறவாமலே...!



மறக்க வேண்டும் மறக்க வேண்டும்
என்று அதையே

நினைத்துக் கொண்டிருக்கிறோம்
எப்பொழுதும்.


அதை மறவாமலே...!

‪#‎நீலா‬

சித்தன்ன வாசல் ஓவியமே



சித்தன்ன வாசல் ஓவியமே
எத்தனை காலம் காத்திருப்பேன்..

மெத்தனம் இல்லாமல் வந்துவிடு
சத்தான முத்தங்கள் தந்துவிடு.


‪#‎நீலா‬

வாழைப்பூச் செம்மடல்



வாழைப்பூச் செம்மடல்
விரிக்கையில் பரவும்
நல் சுகந்தம்தனை
நான் உணர்கிறேனடி
நீயென் அருகினில்
வருகையில்...


‪#‎நீலா

காதலிப்பது போல் நடித்து

காதலிப்பது போல் நடித்து
கபட வேடமிட்டுத் தனது
குறிக்கோள்களை இனிதே
நிறைவேற்றிக் கொள்ளும்
வேசிக்கு இணையான சில
பெண்டிர் இருக்கும் வரை
நற்குணவதிகளையும் மனம்
நம்புவதற்கு சற்றே தயக்கம்
கொள்கிறது மனம்

நீலா

கருவில் சுமந்து உதிரம் ஊட்டி


கருவில் சுமந்து
உதிரம் ஊட்டி
உலகைக் காட்டி
அன்பை உணர்த்தி
பண்பாய் வளர்த்து
ஆளாக்கிய அன்னை...
முதுமை வரை
உடனிருந்து களித்த
உன்னதச் சகோதரிகள்
அனத்திலும் பங்கெடுத்து
வாழ்வில் நம்கூடவே
கைப்பிடித்து நடந்து வரும்
அருமை மனைவி
கலங்காதே என்று
தோள் கொடுத்த
நல் தோழிகள்...
காட்டும் பெண்ணுறவுகள்
யாவர்க்கும்
வாழ்த்துகள்
மழலை முதல்
இன்பம் துன்பம்
நான் இருக்கிறேன்
வாழ்வில் இன்முகம்
நீலாவின்
பெண்மையைப் போற்றுவோம்.
‪#‎நீலமேகம்‬

குறுஞ்செய்திகளைப் பார்பதில்லை



குறுஞ்செய்திகளைப் பார்பதில்லை

குறுகிப்போய்க் கிடக்கின்றேன்

அவரெதுவும் அனுப்ப மாட்டாரெனத் தெரியும்...


தவறிய அழைப்புகளைக் காண்பதில்லை
அவரழைக்க மாட்டாரெனத் தெரியும்...


நடக்கி்ன்றேன் கால்போன போக்கில்

பாதை தெளிவில்லாமலே...


கிடக்கின்றேன் கல்லிலோ முள்ளிலோ

படுக்கையொன்றிருப்பதை அறியாமலே...


குளிப்பதும் குடிப்பதும் கடமைக்காகவே

வாடிக்கையாக உணர்வுகள் உந்துதலால்...


விட்டத்தை மட்டும் தவறாமல் பார்க்கிறேன்

வளர்பிறை எப்போது தோன்றுமென...


என்னுள் ஏனிந்த மாற்றங்கள்

ஏமாற்றம் ஒன்றேதான் வேறெதற்கு

இத்தனை வீரியங்கள்...


காரியங்கள் யாவையும் கடமைக்கே

காரிருள் சூழ்ந்திட்ட காரணத்தால்

வெறுமை நிறைந்திட்ட நெஞ்சக்

குமுறல்களை எவரிடம் சொல்லி அழ?


‪#‎நீலா‬

சில நேரங்களில் சில மனிதர்கள்



சில நேரங்களில்

சில மனிதர்கள்

சிலர் வாழ்வில்

சில உறவுகள்


அவ்வப்போது

பயணிக்கின்றனர்

சிலர் விருந்தினராக

சிலர் மருந்தாக


சிலர் தங்கி விடுகின்றனர்

சிலர் தவிக்க விடுகின்றனர்

சிலர் மங்கி விடுகின்றனர்

சிலர் தவிர்த்து விடுகின்றனர்


இருப்பினும் பயணங்கள் தொடர்கிறது

பழையன கழிதலும்

புதியன புகுதலும்

அஃறிணைகளுக்கு மட்டுமல்ல

உயர்திணைகளுக்கும் தான்.


வாழும் சில காலத்தில்

மகிழ்ச்சியை எடுத்தும்

கொடுத்தும் அன்பாய்

இணந்திருப்போமே...!!!


‪#‎நீலா‬