Thursday, August 14, 2014

சுதந்திரத் திருநாள் வாழ்த்துகள்

இனிய சுதந்திரத் திருநாள் வாழ்த்துகள்
WISH YOU ALL HAPPY INDEPENDENCE DAY
by Neelamegan Neelamegan நீலா
"நீலாவின் கவிதைகள்"
"கவிதைச் சங்கமம்"
https://www.facebook.com/NeelavinKavithaigal
https://www.facebook.com/groups/KAVITHAISANGAMAM/
http://thamizhneelan.blogspot.in/


Wednesday, July 30, 2014

காரியத்தில் கவனமாய் பல்லி...

எங்கோ ஒரு மூலையில்
சுவரைப் பற்றிக்கொண்டு
இரைப்பையை நிரப்ப
காரியத்தில் கவனமாய்
பல்லி...

அதன் கிச்... கிச்...
குரலுக்காய் கண்விழித்துக்
கன்னத்தில் கையூன்றிச்
செவிமடுத்துக் காத்திருப்பில்
நான்...




துளித்துளியாய்

துளித்துளியாய் விழும் மழைச் சிதறல்களின்
குளிர்ச்சியினால் சிலிர்த் தெழுந்துத் துளிர்க்கும்
பச்சிளந்தளிர்கள் போல் கண் விழித்தெழுந்தேன் 
உன்னிதமான செம்மென்னிதழ் ரசவமுதம் என்
கன்னக்கதுப்பின் மேல் படர்ந்தொரு சுகம்பரவி
உன்னதக் கிளர்ச்சி பொங்கிப் பெருகியதால்.....

நீலா


தவிக்கிறேனடி எழிலே...!

உன் வளைவுகளின்
நல் விளைவுகளால்
நான் நிலையிழந்து
தவிக்கிறேனடி எழிலே...!

பெண்ணின் மனது

என்னால் உன்னை அளக்க முடியும்
உன்னால் என்னை அளக்க முடியாது.

நான் உன்னில் நுழைய முடியும்
நீ என்னில் நுழைய முடியாது.

பெண்ணின் மனது





"I CAN MEASURE YOU BUT YOU CAN'T MEASURE ME,
I CAN ENTER YOU BUT YOU CAN'T ENTER ME"

(இதையே முதல் இரண்டு வரிகள் பெண் சொல்வதாகவும் அடுத்த இரண்டு வரிகள் ஆண் சொல்வதாகவும் இருந்தால் அது 18+ ) 

அழகிய யுத்திகளே...!

அரிதாரப் பூச்சுக்களும்
அலங்கார அம்சங்களும்
அரைகுறை ஆடைகளும்
ஆண்களை இம்சிக்க
எத்தனிக்கும் யுவதிகளின் 
அழகிய யுத்திகளே...!


பிரிவின் வலி

பிரிவின் வலி 
மிகக் கொடியது. 
எனக்கிது 
இலையுதிர் காலம்...! 

நீலா



சிலைகளும் கலை இழக்கின்றன

சேலை கட்டி நீ
வெளியே வராதே ஒயிலே
சிலைகளும் கலை இழக்கின்றன.





சேதி சொல்லிப் போனாலென்ன கிளியே

சேதி சொல்லிப் போனாலென்ன கிளியே
நானும் சோகமின்றி இருப்பேனடி கிளியே
தவிக்க விட்டுப் போனவளே கிளியே
திரும்பி நீயும் வருவதெப்போ கிளியே

காலை முதல் கவலையில் நான் கிளியே
கால் கடுக்கக் காத்திருக்கேன் கிளியே
மாலை வேளை கூடுதடி கிளியே
மாமன் மனம் வாடுதடி கிளியே

கருக்கும் முன்னே வந்திடடி கிளியே
கண்ணுக்குள்ளே குடி இருக்கும் கிளியே
மனசெல்லாம் நோகுதடி கிளியே
நீயும் விரசாக வந்திடடி கிளியே.

-நீலா




அவர்களுக்கெத்தனை மனங்களோ...!

அவனையும் காணவில்லை
அவளையும் காணவில்லை

எவர் மனதை எவரறிவார்
அவர்களுக்கெத்தனை மனங்களோ...!

பூரிக்கின்றேன் புன்னகையில்.

பெண்ணே ஏதாவது ஒரு தடையத்தை 
மறந்து விட்டுச் செல்வானாம் கள்வன்

என்னிதயம் திருட வந்த கள்ளியே,
நீயும் தான் விட்டுச் சென்றுள்ளாய்

அதிகாலை முற்றம் அலங்கரித்துச்
சென்ற போது மறந்தல்ல வேண்டுமென்றே

இனிய நறுமலர் சுகந்தம்தனை அது
சாளரத்தின் வழி நுழைந்தென் நாசியில்

பரவி மனம் புகுந்து களித்ததாலே
கண் விழித்தேன் கண்டு கொண்டேன்

உன்னழகுக் கோலமதை பெண்ணழகின்
வண்ணமதை பூரிக்கின்றேன் புன்னகையில்.




ஏக்கமும் போச்சு

ஏக்கமும் போச்சு அதன் 
தாக்கமும் ஓடிப் போச்சு
துக்கமும் போச்சு இப்போ 
தூக்கம் தான் என் மூச்சு
நான் தூங்கி நாளாச்சு
உன் தாலாட்டும் வேண்டாமடி
பாராட்டும் வெளி வேஷமடி
பட்டதெல்லாம் போதுமடி
பாய் போட்டுப் படுத்துறங்க
விழி துடிக்குது ஆளைவிடு.



நீ ஒரு சின்னபிள்ளை தான்,

நீ இப்போ
ஒரு சின்னபிள்ளை தான்,
உனக்கும் இரு
சின்னப் பிள்ளைகள் தான்...

முதலில் நான் 
உன் மடியில்.....
பின்னர் நம்
அழகு மகள்
உன் தோளில்

நம்
திருமணத்திற்குப் பின்.
சரி தானே அன்பே...!


இதமாய் வளரட்டும் அர்ச்சனைகள்

எட்டு கால பூஜைகளும்
இடைவிடாமல் நாளும் 
நடக்கிறது இதயராணிக்கு

இராஜாவோ மயக்கத்தின் வாசலில்
மங்கிய ஒளியினில் தூங்காமல்
நித்தம் பஞ்சணைப் பரவசத்தில்

பூஜையின் லயித்து திளைப்பால்
இராணியோ பூரிப்பின் கிறக்கத்தில்
இரவு பகலேதும் அறியாமல்.

இன்பச் சுரங்கள் தொடரட்டும்
இனிதே சுவைக்கட்டும் தனிமைகள்
இதமாய் வளரட்டும் அர்ச்சனைகள்.




தூக்கம் தொலைத்த இரவுகளில்

தூக்கம் தொலைத்த இரவுகளில்
துக்கம் தோய்ந்த நினைவுகளை
இப்போதும் மனம் நினைக்கையில் 
சொர்க்கமாய்த் தான் தோன்றுகிறது
சுகமான சுமைகளாக, சுவைகளாக...!

பரிதவிப்பில்...

புதிய வண்ணப் புறாவொன்று
பள்ளியறைக்குள் பக்குவமாய்
பஞ்சணைப் பரிமாற்றங்களில்...

பழகிய வெண்புறாவோ சிறகொடிந்து 
பறக்கவும் முடியாமல் மனம் நொந்து
வான் வெளியில் பரிதவிப்பில்...






கொடுமையே விலகிவிடு

உணர்வை வெறுக்கிறேன்
உலகை வெறுக்கிறேன்
காதலை வெறுக்கிறேன்
போலியான நட்பை வெறுக்கிறேன்
அன்பைக் காட்டி வஞ்சனை செய்வோரை முற்றிலும் வெறுக்கிறேன
பாசமெனும் போர்வைக்குள் பதுங்கி மோசம் செய்து கொண்டிருக்கும்
கொடியவரை வெறுக்கிறேன்
வராதீர் இனி என்னருகில்
உன் நிழலும் எனை இம்சிக்கும்
கொடுமையே விலகிவிடு

வாழ்வை வெறுக்கிறேன்
வெகு தூரம் நீ ஓடிவிடு இல்லையேல்
எனை ஓடவிடு
போதும் உன் சகவாசம்
எனக்கினி வேண்டாம் சுகவாசம்
செல்கிறேன் வெறுத்தொதுங்கி
போலியே உனைத்துறந்து




தங்கச்சுரங்கம் வேண்டுமா கண்ணே..
நீ தங்க என் 
மனச்சுரங்கம் வேண்டுமா பெண்ணே...!


தின்று மென்று

தின்று மென்று 
விழுங்கிவிடடா என்னை
உன் காதல்ப் பசி 
அடங்கி முடங்கட்டும்...



உனையுணரயெனையுணர்த்தியவளே

உனையுணரயெனையுணர்த்தியவளே, 
உன்னன்பிற்குக்கைமாறென்னடியோ
சொல்லிச்செல்லடியென்செல்லக்கிளி


"ம்ம்"


சேட்டைகள் புதிதல்லவே..!

கண்களைத் துளைத்து மெல்ல
மனதைக் கிள்ளிச் சென்றாய்

இதழ்களைத் திறந்து நல்ல
முறுவல் உதிர்த்துச் சென்றாய்

உனக்கென்ன போடி பெண்ணே,
சேட்டைகள் புதிதல்லவே..!

கவியுனைப் புனைவதற்கு
தவிப்பவன் நானல்லவோ...!

- நீலா

அள்ளிப்பருக ஆசையசடி...!

எந்த ஜென்மத்தில் 
என்ன புண்ணியம் செய்தேனோ,
எந்த ஜென்மத்தின் 
சொந்தமும் பந்தமும் இன்னமும்
தொடர்கிறதோ புரியவில்லை அன்பே...!

இப்பிறவியிலும் உன்னுடன் சேர்ந்தே
இன்னும் பல புண்ணியங்கள் செய்து
இனிவரும் எப்பிறப்பிலும் நாம் இணை பிரியாமல்
இன்பச் சுவைகள் பல அள்ளிப்பருக ஆசையசடி...!

வானம் விழிங்கியதா


மனமிருந்தும்


முறையோ...!

நீ முறைத்து 
மறைவதொன்றும் 
புதிதல்லவே
மறையுமுன்னே உன் 
மலரம்புகளால் என் நெஞ்சம் 
நிறைத்துச் செல்வதும் முறையோ...!

விழிக்கணையின் தாக்குதலால்


பேசாதே...


பருவத்தின் பார்வையால்

உன் பருவத்தின் பார்வையால் 
பாதிப்படைந்து மருத்துவம் வேண்டி 
படுக்கையில் துவண்டு கிடக்கும்
நானும் ஒரு மன நோயாளியே...!

ரணங்கள் நிறைந்த காயம் நான்

ரணங்கள் நிறைந்த காயம் நான்
மருந்தில் ஊறிய பஞ்சாய் நீ
தடவித் துடைத்தாலும் எரிச்சல்
துடைக்காமல் நகர்ந்தாலும் வலி.

இன்பத்தின் எல்லையை அளந்து வரலாம்

இனிய உறவே...! 
இன்முகம் காட்டி எனை மகிழ்விக்கிறாய் நீ..!
துன்பங்கள் தொலை தூரம் பறந்து போயின
எண்ணங்கள் யாவும் எழுச்சி அடைகின்றன
வண்ணங்கள் பூத்துக் குலுங்குகிறது நெஞ்சில்
வசந்த வாசல் அழைப்பு விடுக்கிறது
சுகந்தம் எனைச்சுற்றி வட்டமிடுகிறது
சொந்தம் கொள்ள அடம் பிடிக்கிறது மனது
பந்தங்களைக் கலந்து நல்வழியொன்றை காட்டிவிடு
அந்தமானவளே எனை ஆட்கொள்ளடி,
அன்பால் நாம்

இன்பத்தின் எல்லையை
அளந்து வரலாம் வா....!

கரு தேட வேண்டும்


ஜீவன் இல்லையாம்

என் கவிதை வரிகளில் ஜீவன் இல்லையாம்
எப்படி இருக்கும்?
அதைக் குடித்துச் சென்று விட்டாளே அவள்.

குடித்ததைத் திருப்பிக் கொடுக்கவும் 
கொடுத்ததைத் திருப்பி எடுக்கவும் 
மனமில்லை இருவருக்கும்

ஜீவ பரிமாற்றங்களில் மட்டும்
கரைகிறதெங்கள் நொடிகளும் நாட்களும்
சேர்ந்து மகிழ்ந்திட வழியில்லாமல்

பிரிதொரு ஜென்மத்திலேனும் இணையும்
எங்கள் காதல் ஜீவன்கள் பிளவில்லாமல்
என்ற நம்பிக்கையுடனே...

"ஏய்... லூசு...!"

"ஏய்... லூசு...!"

இந்த ஒரே ஆயுதத்தால் 
அத்தனை கோபங்களையும் 
வீழ்த்தியெனை மீட்டெடுத்து 
அடக்கி ஆளும் தனித்திறமை 
உனக்கு மட்டும் தான் சொந்தமடி
என் அன்பே...!

எழுவாய் நீ...!

எழுவாய் நீ...!
பயனிலைகள் உன்
செயப்படுபொருளுக்காய்க்
காத்துக்கிடக்கின்றன...!

ரசித்து விட்டாயே...!

என் கவிகளை ரசிக்கச் சொன்னால்..
என்னையே ரசித்து விட்டாயே...!

என்னடி இது


நீ என் உயிரினும் உயிர்

காரம்
மணம்
குணம்
என்றெதுவுமில்லாது
என்னடா வாழ்க்கை இதுவென்று
சலித்துத் திரிந்த போதினிலே...

நிறம்
மணம்
குணம்
சுவை
திடம்
என யாவையும் நிறைந்த
சக்தியாய் வந்தென் மனக்கதவைத்
திறந்து மெல்ல குடி புகுந்தாயே
தேவி ...

நீ என் உயிரினும் உயிர்....

பொய்பித்துப் பழகலாம் வா அன்பே


கருவறை முழுவது


ஏக்கத்துடனே...


மௌனம்