Friday, October 12, 2012

தூண்டில்

என் மனத்தூண்டில் தயார்
உன் விழிக்குளத்தில் மீன் பிடிக்க

நடித்தது போதும்

நடித்தது போதும் சித்திரமே...
சிந்திடு கொஞ்சம் புன்னகையை
துடிக்குது எந்தன் தேகமெல்லாம்
இடை வளைத்துப் பிடிக்கும் நாளை எண்ணி

வரலாமா... வேண்டாமா...?

என்னை ஏறெடுத்துப் 
பார்க்கத் தயங்கும்
நற்குணவதி உன்னை 
ஈன்றெடுத்த பெற்றோரை
வணங்குகிறேன்...

தந்தையிடம் சொல்லிவிடு
தகுந்ததோர் நன்னாளில்
தவறாமல் நான் வருவேன்
நங்கையுன்னை பெண் கேட்க
தனையனிடம் கேட்டுச் சொல்
வரலாமா... வேண்டாமா...?

(அவங்கிட்ட பெர்மிஷன் வாங்கலைன்னா குமுறி எடுத்துருவான் பய புள்ள. ரொம்ப பொல்லாதவன். அவனைபத்தி எனக்குத்தான தெரியும்)

கலங்கித்தான் போனது

போடா பொறுக்கி என்று 
சொல்லி நீ செருப்பெடுக்க
குனிந்த போதும்
வாடாத உன் மெல்லிடை
வளைந்து ஒடிந்து விடுமோவென
கலங்கித்தான் போனது என் 
சொல்கேளா இளமனது...

தாருமாறாய்

தேரில் வந்த கன்னியவள்
நேரில் தந்த கண்ணசைவில்
தாருமாறாய் துடிக்குது என்
பாழாய் போன இள நெஞ்சம்.

துணை சேர.

இடை சிறுத்த இனியவளே உன்
கடைக்கண்ணின் ஏகாந்தமும்
அடுக்கி வைத்த வெண்பற்களும் எனை
அழைக்குதடி ஆற்றங்கரை உன்னோடு துணை சேர..

காதல் விழா..

வில்லெடுத்து எய்தாளோ..
வேலெடுத்து தைத்தாளோ..
தையலவள் தாக்கியதில்
இதயமெல்லாம் காதல் விழா..

இராஜ கோபுரம்

இராஜ கோபுரம் ஒன்று
மிதமாய் நடை பயில்கையில்
மஹாராஜன் மனமெதையோ
இழந்து தொடர்கிறது 
கொலுசொலியின் பின்னே

குன்றியபின்

கால் கடுக்க காத்திருந்தேன்
பருவத்தில் நீ கண்டுக்கல...
கோலூன்றி குன்றியபின்
கண்சாடை எதற்கடியோ...

ஒன்றைப் பெற

ஒன்றைப் பெற 
ஒன்றை இழக்க
வேண்டியது
இயற்கையின் நியதியாம்....

உன் செவ்விதழ்
முத்தம் பெற நான்
எதை இழக்க வேண்டும்
யுவதியே...!

Wednesday, April 4, 2012

கை வீசம்மா கை வீசு


கை வீசம்மா கை வீசு
கடற்கரை போலாம் கை வீசு
சுண்டல் வாங்கலாம் கை வீசு
மெதுவாய் தின்னலாம் கை வீசு

கை வீசம்மா கை வீசு
சினிமா போகலாம் கை வீசு
பாப் கார்ன் வாங்கலாம் கை வீசு
பகிர்ந்து தின்னலாம் கை வீசு

கை வீசம்மா கை வீசு
பூங்கா போகலாம் கை வீசு
இளநீர் வாங்கலாம் கை வீசு
இதமாய் பருகலாம் கை வீசு

கை வீசம்மா கை வீசு
உணவகம் போகலாம் கை வீசு
பிஸ்ஸா வாங்கலாம் கை வீசு
பிய்த்துத் தின்னலாம் கை வீசு

கை வீசம்மா கை வீசு
மனமும் நிறைந்தது கை வீசு
பணமும் தீர்ந்தது கை வீசு
தினமும் வராதே கை வீசு.

நீலா......

மியாவ்..! மியாவ்..!! ஓடி வா..!


மியாவ்..! மியாவ்..!! ஓடி வா..!
மின்னல் போல ஓடி வா...!
மதில் மேல ஏறி வா...!

மனிதன் குறுக்கே வருவானே..
சனியன் போன பின்னாலே
சகுனம் பார்த்து ஓடி வா...!

நீலா...

ஆரம்பம் உன்னுடனே


ஆரம்பம் உன்னுடனே
கரம் பற்றி நாளும் நான்
தாரம் போல் சேர்ந்தே வா……!

ஈரம் உலராமல் என்
உரம் ஏற்றும் உன்னதமே
சரம் சரமாய் சக்தியைத் தா…!

சிரம் தாழ்த்தி வேண்டுகிறேன்
பாரம் ஒரு பொருட்டில்லை
தூரம் போய் வதைக்காதே…..!

தரம் பார்த்து அணைத்து வந்தேன்
திரம் அனைத்தும் நீயென்று
சோரம் போய் களிக்காதே…..!

நிறம் எனக்கு தேவையில்லை
சுரமில்லா எந்திரமே
வீரம் தான் வேண்டுமடி…….!

நீலா...

Monday, March 26, 2012



வானிலை அறிக்கையை
வானிலும் மேகத்திலும் கண்டேன்.
வாழ்நிலை அறிக்கையை உன்
கண்ணிலும் கூந்தலிலும் கண்டேன்.

நீலா.....

Saturday, February 4, 2012

தந்திரக்காரியே...!

ஏய்...!



தந்திரக்காரியே...!

மந்திரம் என்ன இட்டாய்.?

சுதந்திரமாய் பறந்த என்மனம்

எந்திரமாய் உன்னையே சுழல்கிறதே...!



நீலா...

தந்திரக்காரியே...!

ஏய்...!

தந்திரக்காரியே...!
மந்திரம் என்ன இட்டாய்.?
சுதந்திரமாய் இருந்த என்மனம்
எந்திரமாய் உன்னையே சுழல்கிறதே...!

நீலா...

எந்தன் முழு மதியே..!

சந்தைக்கு வந்த உன்னை

சந்தித்த வேளை முதல்

சிந்தை நிறைந்து நின்ற

எந்தன் முழு மதியே..!

நெஞ்சம் கதி கலங்க

பந்தாய் உருட்டி என்னை

சொந்தம் கொள்ள எண்ணும்

விந்தையின் மாயம் என்ன…?

நீலா…


அடியே...!