Tuesday, June 15, 2010

புத்தகப்புழுவாய் மாறிவிட்டேன்

புத்தகப்புழுவாய் மாறிவிட்டேன்
முகப் புத்தகப்புழுவாய் மாறி விட்டேன்

நித்தமும் உந்தன் பக்கங்களில் நான்
சித்திரமாய் எனைப் பதித்துக் கொண்டேன்

நித்திரை மொத்தமும் மறந்து விட்டேன்
சுத்தமாய் சாப்பிட மறுத்து விட்டேன்

சத்தமில்லாமல் சன்னதி நீயென இருந்து விட்டேன்
சித்தமெல்லமுன் ரத்தம் பாய்ந்திட சமைந்து விட்டேன்

சுற்றங்கள் யாவையும் நீயே தான்
சொந்தங்கள் எல்லாம் நீயே தான்

உத்திரம் பார்த்தால் உன் வடிவம்
சத்தியம் சொல்கிறேன் புத்தகமே

சங்கதியெல்லாம் புத்துணர்வு
உன்கதியே என் சத்துணவு

தொற்றிக் கொண்டது புத்தக வியாதி
முற்றியும் விட்டது இத்தள மோகம்

கற்ற வித்தயை கொட்டித் தீர்க்கிறேன்
பெற்ற புத்தியை பகிர்ந்து கொள்கிறேன்

புதிதாய் பலப்பல தெரிந்து வருகிறேன்
தெரிந்த செய்தியை வழங்கி மகிழ்கிறேன்

அறிந்தும் உன்னுள் முடங்கிக் கிடக்கிறேன்
அடியேன் உனைவிட்டோட வழியும் தேடினேன்

அறியாமல் தவிக்கிறேன் வியாதி கொண்டே
அறிந்தவர்கள் சொல்லுங்கள் மருந்து என்ன?

விடிந்தது முதல் அடைவது வரை
உன் மடிமேல் கிடக்கிறேன் பொழுதெல்லாம்

குறைத்துக் கொள்ளவும் கட்டுப்படுத்தவும்
குனவான்கள் நீங்கள் குறி சொல்லுங்கள்

நோயாளி என்னை நேராக்குங்கள்
சீக்காளி என்னை சீராக்குங்கள்.

புத்தகப்புழுவாய் மாறிவிட்டேன்
முகப் புத்தகப்புழுவாய் மாறி விட்டேன்

2 comments:

  1. உங்களுடன் என்னையும் சேர்த்து எத்தனையோ முகப்புத்தகப் புழுக்கள், குடிகாரனிடம் குடியை நிறுத்த வழி கேட்ட கதையாய், நல்ல ஆளய்யா.

    ReplyDelete
  2. ஹா.. ஹா.. அண்ணா.. புல்லரிக்குது.

    ReplyDelete