புத்தகப்புழுவாய் மாறிவிட்டேன்
முகப் புத்தகப்புழுவாய் மாறி விட்டேன்
நித்தமும் உந்தன் பக்கங்களில் நான்
சித்திரமாய் எனைப் பதித்துக் கொண்டேன்
நித்திரை மொத்தமும் மறந்து விட்டேன்
சுத்தமாய் சாப்பிட மறுத்து விட்டேன்
சத்தமில்லாமல் சன்னதி நீயென இருந்து விட்டேன்
சித்தமெல்லமுன் ரத்தம் பாய்ந்திட சமைந்து விட்டேன்
முகப் புத்தகப்புழுவாய் மாறி விட்டேன்
நித்தமும் உந்தன் பக்கங்களில் நான்
சித்திரமாய் எனைப் பதித்துக் கொண்டேன்
நித்திரை மொத்தமும் மறந்து விட்டேன்
சுத்தமாய் சாப்பிட மறுத்து விட்டேன்
சத்தமில்லாமல் சன்னதி நீயென இருந்து விட்டேன்
சித்தமெல்லமுன் ரத்தம் பாய்ந்திட சமைந்து விட்டேன்
சுற்றங்கள் யாவையும் நீயே தான்
சொந்தங்கள் எல்லாம் நீயே தான்
சொந்தங்கள் எல்லாம் நீயே தான்
உத்திரம் பார்த்தால் உன் வடிவம்
சத்தியம் சொல்கிறேன் புத்தகமே
சங்கதியெல்லாம் புத்துணர்வு
உன்கதியே என் சத்துணவு
தொற்றிக் கொண்டது புத்தக வியாதி
முற்றியும் விட்டது இத்தள மோகம்
கற்ற வித்தயை கொட்டித் தீர்க்கிறேன்
பெற்ற புத்தியை பகிர்ந்து கொள்கிறேன்
புதிதாய் பலப்பல தெரிந்து வருகிறேன்
தெரிந்த செய்தியை வழங்கி மகிழ்கிறேன்
அறிந்தும் உன்னுள் முடங்கிக் கிடக்கிறேன்
அடியேன் உனைவிட்டோட வழியும் தேடினேன்
அறியாமல் தவிக்கிறேன் வியாதி கொண்டே
அறிந்தவர்கள் சொல்லுங்கள் மருந்து என்ன?
விடிந்தது முதல் அடைவது வரை
உன் மடிமேல் கிடக்கிறேன் பொழுதெல்லாம்
குறைத்துக் கொள்ளவும் கட்டுப்படுத்தவும்
குனவான்கள் நீங்கள் குறி சொல்லுங்கள்
நோயாளி என்னை நேராக்குங்கள்
சீக்காளி என்னை சீராக்குங்கள்.
புத்தகப்புழுவாய் மாறிவிட்டேன்
முகப் புத்தகப்புழுவாய் மாறி விட்டேன்
உங்களுடன் என்னையும் சேர்த்து எத்தனையோ முகப்புத்தகப் புழுக்கள், குடிகாரனிடம் குடியை நிறுத்த வழி கேட்ட கதையாய், நல்ல ஆளய்யா.
ReplyDeleteஹா.. ஹா.. அண்ணா.. புல்லரிக்குது.
ReplyDelete