Wednesday, July 30, 2014

பூரிக்கின்றேன் புன்னகையில்.

பெண்ணே ஏதாவது ஒரு தடையத்தை 
மறந்து விட்டுச் செல்வானாம் கள்வன்

என்னிதயம் திருட வந்த கள்ளியே,
நீயும் தான் விட்டுச் சென்றுள்ளாய்

அதிகாலை முற்றம் அலங்கரித்துச்
சென்ற போது மறந்தல்ல வேண்டுமென்றே

இனிய நறுமலர் சுகந்தம்தனை அது
சாளரத்தின் வழி நுழைந்தென் நாசியில்

பரவி மனம் புகுந்து களித்ததாலே
கண் விழித்தேன் கண்டு கொண்டேன்

உன்னழகுக் கோலமதை பெண்ணழகின்
வண்ணமதை பூரிக்கின்றேன் புன்னகையில்.




No comments:

Post a Comment