Monday, July 6, 2015

குறிஞ்சி மலரொன்று



குறிஞ்சி மலரொன்று
முல்லைச் சிரிப்புடன்
மருதத்தில் கிறங்கியே
நெய்த சுகத்துடன்
பாலையில் உவப்பு.


‪#‎நீலா

நீ நித்தம் வழங்கி



நீ நித்தம் வழங்கி
நான் பெற்று மகிழ்ந்த
முத்தங்கள் யாவையும்
என் இதயக் கூட்டுக்குள்
சேமித்து இருப்பில் உள்ளன.
திருப்பித் தரவும் தயார்.
நீ வாங்க மாட்டாயே..!
அதனால் அவைகளைக்
கவிதைகளாய்ச் சமர்ப்பிக்கிறேன்
(சு)வாசித்து மகிழ்ச்சி கொள்.


‪#‎நீலா‬

விழிகள் நான்கும்



நம் விழிகள் நான்கும்
கலந்து புணர்ந்து ஏற்படுத்திய
பிரளயத்தில் தானே நமக்குள்
இனிய காதல் தோன்றியது!


கலகம் பிறந்தால் தான்
அதில் ஞாயம் பிறக்கும்
என்பது மெய் தானன்பே
என் மனதிற்கு இனியவளே!

‪#‎நீலா‬

இலவம் பஞ்சா



இலவம் பஞ்சா மிதக்குறியே
இமைகளுக் குள்ளே பறக்குறியே
உறங்கும் வேளை உசுப்புறியே
உணர்வில் கலந்தே இனிக்கிறியே!


‪#‎நீலா‬

சுட்டுவச்ச இட்டிலியும்



சுட்டுவச்ச இட்டிலியும்
சுவைமிகுச் சட்டினியும்
தட்டினிலே ஓராறு
வாயினிலே தேனாறு.


இன்னுமோராறு சூடாக
இருக்குதுப்பாரு எனக்காக
இட்டிலிக்குண்டான் உள்ள
கொண்டாட்டம் நெஞ்சுக்குள்ள

உண்டான பசியெல்லாம்
பறக்குதுப்பாரு பஞ்சாக
பன்னிரண்டு இட்டிலியால்
பண்ணிரண்டு பாடுதுவாய்.

மல்லிகைப்பூ கொண்டைக்காரி
கண்டாங்கிச் சேலைக்காரி
மணமணக்கும் கைக்காரிக்கு
தினமும் நானடிமைதானே!

‪#‎நீலா‬

உதிரம் கலந்த உறவே.



நெஞ்சில் புகுந்த மஞ்சக் கிழங்கே
எங்க அத்தை பெத்த கத்தரிப்பிஞ்சே

தங்கக் கிளியே சொந்தக் குயிலே
அங்கம் மின்னும் அந்தி வெயிலே


மங்கை எந்தன் வாடா மல்லியே
மங்காது ஒளிரும் வெள்ளி நிலவே

சிந்தை நிறைந்து இனிக்கும் கனியே
எந்தன் உதிரம் கலந்த உறவே.

‪#‎நீலா‬

புற்றாகிச் சாக.



விரல் பற்றியே
உறிந்திழுப்பார் புகை.
புற்றாகிச் சாக.

‪#‎நீலா

தென்றல் காற்றிலும்

தென்றல் காற்றிலும்
தேகம் வியர்க்கின்றது.
அவளின் அணைப்பினில்.
‪#‎நீலா

நற்பதியம் போடவா



உனது கொவ்வைச்
செவ்விதழ்களுக்குள்
என்னிதழ் நுழைத்து

நற்பதியம் போடவா
பெண்ணே அது
கனிரசம் ஊறியே


உரம் பாய்ந்து
வீரியம் ஈர்த்து
துளிர்த்து வளரட்டும்

புது முத்தச் செடியாக...!

‪#‎நீலா‬

காகம் கரைகிறது.



காகம் கரைகிறது.
கருகுது வெயிலில் குயிலென்று
காதலுடனே.

‪#‎நீலா

அக்மார்க் நெய்யே!



அடியே!
அக்மார்க் நெய்யே!
அக்கா பெத்துப்போட்ட
ஐஎஸ்ஐ மார்க் அழகே!


ஹால்மார்க் கோல்டே!
ஹார்ட் ப்ரேக்கிங்
காதல் கனியே!

என் லேன்ட்மார்க்
எப்போதும் உன்
காலடித் தடம்தான்டி!

புக்மார்க் போட்டிருக்கேன்
நெஞ்சுகுள்ள நான்தான்டி
உன்னழகுப் புன்னகைய

கண்டுக்காமப் போறியேடி
கண்ணழகுச் சிங்காரி நீ
கண்ணுக்குள்ளே நிக்கிறியே!.

‪#‎நீலா‬

நீ அலங்காரியா



ஏய்...!
பொண்ணு...!!

நீ அலங்காரியா
இல்லை
அகங்காரியா?


அலங்காரம் செய்த
அகங்காரியா
இல்லை
அகங்காரம் கொண்ட
அலங்காரியா?

உன்
அகங்காரத்தால் என்னை
அலங்கரிக்கிறாயடி..!

‪#‎நீலா‬

இதழ்களை மட்டும்



இதழ்களை மட்டும்தானடி கேட்டேன்...
மதுவையும் ஏனடி கலந்தளித்தாய்?

மயக்கம் வருகிறது மடியைத்தாடி
என் மன்மத ராணியே...!


‪#‎நீலா

கடந்தே மாறும்




நினைவிற் கொள்ளின் துன்பம் நிலையன்று
நொடியிற் கடந்தே மாறும்.

‪#‎இருவரிக்குரல்_நீலா‬

தத்துவம் இங்கே நிறைந்திருக்கு



தத்துவம் இங்கே நிறைந்திருக்கு
தேடித் திரியத் தேவையில்லை.
பக்குவமாகப் படித்து விட்டுக்
கச்சிதமாய் அதைப் பின்பற்று.


வாழ்க்கை நெறிமுறை பாசப்
பரிந்துரை நேசத் தெளிவுரை
அன்பின் அருளுரை காதல்
கருத்துரை கண்ணியக் கனிவுரை

கட்சிக் கோட்பாடு கருத்துச்
செரிவுகள் யாவும் இவ்விடம்
குவிந்து கிடக்கையில் நாளும்
நல்லதைக் கடைபிடிப்போம் நாம்.

‪#‎நீலா‬

முகூர்த்தம் தேடி.



தினமும் கிழிக்கின்றாள்
முதிர்க்கன்னி நாட்காட்டியை.
முகூர்த்தம் தேடி.

‪#‎நீலா‬

நல் அன்பே...!



சுருசுருப்பான தருணங்களிலும்
எனக்காக சிறு புன்னகையை நீ
உதிர்த்துச் சென்றதில் என் சித்தம்
திளைக்கின்றது நல் அன்பே...!

-நீலா

உன்னதம்தானடி!



உனது விழியசைவுகளில்
நான் தடுமாறிப்போனதும்
உகந்தளித்த முத்தங்கள்
இடம் மாறிப்பதிந்ததும்
உண்மையடி உத்தமியே!


கணக்காக மாறிய
முத்தங்களை நீ
கன்ன அசைவுகளால்
சீராகப் பெற்றுக்கொண்ட
உத்தியும் உன்னதம்தானடி!

‪#‎நீலா‬

எனதினியசகியே!



தேனினுமினிய நின்றன்
அமுதூறும் செவ்விதழகள்
மேவிநற் சுவையுண்டு
களித்து மகிழ்ந்திடவெனக்
கோரரிய வாய்ப்பளித்தமைக்கு
நன்றியடி எனதினியசகியே!


‪#‎நீலா