Monday, July 6, 2015

குறிஞ்சி மலரொன்று



குறிஞ்சி மலரொன்று
முல்லைச் சிரிப்புடன்
மருதத்தில் கிறங்கியே
நெய்த சுகத்துடன்
பாலையில் உவப்பு.


‪#‎நீலா

நீ நித்தம் வழங்கி



நீ நித்தம் வழங்கி
நான் பெற்று மகிழ்ந்த
முத்தங்கள் யாவையும்
என் இதயக் கூட்டுக்குள்
சேமித்து இருப்பில் உள்ளன.
திருப்பித் தரவும் தயார்.
நீ வாங்க மாட்டாயே..!
அதனால் அவைகளைக்
கவிதைகளாய்ச் சமர்ப்பிக்கிறேன்
(சு)வாசித்து மகிழ்ச்சி கொள்.


‪#‎நீலா‬

விழிகள் நான்கும்



நம் விழிகள் நான்கும்
கலந்து புணர்ந்து ஏற்படுத்திய
பிரளயத்தில் தானே நமக்குள்
இனிய காதல் தோன்றியது!


கலகம் பிறந்தால் தான்
அதில் ஞாயம் பிறக்கும்
என்பது மெய் தானன்பே
என் மனதிற்கு இனியவளே!

‪#‎நீலா‬

இலவம் பஞ்சா



இலவம் பஞ்சா மிதக்குறியே
இமைகளுக் குள்ளே பறக்குறியே
உறங்கும் வேளை உசுப்புறியே
உணர்வில் கலந்தே இனிக்கிறியே!


‪#‎நீலா‬

சுட்டுவச்ச இட்டிலியும்



சுட்டுவச்ச இட்டிலியும்
சுவைமிகுச் சட்டினியும்
தட்டினிலே ஓராறு
வாயினிலே தேனாறு.


இன்னுமோராறு சூடாக
இருக்குதுப்பாரு எனக்காக
இட்டிலிக்குண்டான் உள்ள
கொண்டாட்டம் நெஞ்சுக்குள்ள

உண்டான பசியெல்லாம்
பறக்குதுப்பாரு பஞ்சாக
பன்னிரண்டு இட்டிலியால்
பண்ணிரண்டு பாடுதுவாய்.

மல்லிகைப்பூ கொண்டைக்காரி
கண்டாங்கிச் சேலைக்காரி
மணமணக்கும் கைக்காரிக்கு
தினமும் நானடிமைதானே!

‪#‎நீலா‬

உதிரம் கலந்த உறவே.



நெஞ்சில் புகுந்த மஞ்சக் கிழங்கே
எங்க அத்தை பெத்த கத்தரிப்பிஞ்சே

தங்கக் கிளியே சொந்தக் குயிலே
அங்கம் மின்னும் அந்தி வெயிலே


மங்கை எந்தன் வாடா மல்லியே
மங்காது ஒளிரும் வெள்ளி நிலவே

சிந்தை நிறைந்து இனிக்கும் கனியே
எந்தன் உதிரம் கலந்த உறவே.

‪#‎நீலா‬

புற்றாகிச் சாக.



விரல் பற்றியே
உறிந்திழுப்பார் புகை.
புற்றாகிச் சாக.

‪#‎நீலா