Friday, October 12, 2012

தூண்டில்

என் மனத்தூண்டில் தயார்
உன் விழிக்குளத்தில் மீன் பிடிக்க

நடித்தது போதும்

நடித்தது போதும் சித்திரமே...
சிந்திடு கொஞ்சம் புன்னகையை
துடிக்குது எந்தன் தேகமெல்லாம்
இடை வளைத்துப் பிடிக்கும் நாளை எண்ணி

வரலாமா... வேண்டாமா...?

என்னை ஏறெடுத்துப் 
பார்க்கத் தயங்கும்
நற்குணவதி உன்னை 
ஈன்றெடுத்த பெற்றோரை
வணங்குகிறேன்...

தந்தையிடம் சொல்லிவிடு
தகுந்ததோர் நன்னாளில்
தவறாமல் நான் வருவேன்
நங்கையுன்னை பெண் கேட்க
தனையனிடம் கேட்டுச் சொல்
வரலாமா... வேண்டாமா...?

(அவங்கிட்ட பெர்மிஷன் வாங்கலைன்னா குமுறி எடுத்துருவான் பய புள்ள. ரொம்ப பொல்லாதவன். அவனைபத்தி எனக்குத்தான தெரியும்)

கலங்கித்தான் போனது

போடா பொறுக்கி என்று 
சொல்லி நீ செருப்பெடுக்க
குனிந்த போதும்
வாடாத உன் மெல்லிடை
வளைந்து ஒடிந்து விடுமோவென
கலங்கித்தான் போனது என் 
சொல்கேளா இளமனது...

தாருமாறாய்

தேரில் வந்த கன்னியவள்
நேரில் தந்த கண்ணசைவில்
தாருமாறாய் துடிக்குது என்
பாழாய் போன இள நெஞ்சம்.

துணை சேர.

இடை சிறுத்த இனியவளே உன்
கடைக்கண்ணின் ஏகாந்தமும்
அடுக்கி வைத்த வெண்பற்களும் எனை
அழைக்குதடி ஆற்றங்கரை உன்னோடு துணை சேர..

காதல் விழா..

வில்லெடுத்து எய்தாளோ..
வேலெடுத்து தைத்தாளோ..
தையலவள் தாக்கியதில்
இதயமெல்லாம் காதல் விழா..

இராஜ கோபுரம்

இராஜ கோபுரம் ஒன்று
மிதமாய் நடை பயில்கையில்
மஹாராஜன் மனமெதையோ
இழந்து தொடர்கிறது 
கொலுசொலியின் பின்னே

குன்றியபின்

கால் கடுக்க காத்திருந்தேன்
பருவத்தில் நீ கண்டுக்கல...
கோலூன்றி குன்றியபின்
கண்சாடை எதற்கடியோ...

ஒன்றைப் பெற

ஒன்றைப் பெற 
ஒன்றை இழக்க
வேண்டியது
இயற்கையின் நியதியாம்....

உன் செவ்விதழ்
முத்தம் பெற நான்
எதை இழக்க வேண்டும்
யுவதியே...!