கவிதை எழுதப் போறேன்
நான் கவிதை எழுதப் போறேன்.
கண்ணே...!
உன் கோவைச் செவ்வாய்
மெல்லிதழ் மலர்ந்து
வார்த்தை ஒன்று
தந்துவிடு.
அதையே என்
கருப்பொருளாய்
கைகொண்டு
கவிதை எழுதப் போறேன்.
உன் திருவாய் மலர்ந்து
உதிர்த்த முத்து என் காதில்
விழுந்தும் விழாமலுமாய்
மெதுவாய் இசைக்கிறது
“அன்பே” என்று…
ஆட்கொண்டேன்
அதை முதல் முத்தாய்.
அடுத்துதிரும் அருமுத்து
என்னவென்று நானறிவேன்.
“ஆருயிரே…!”
அது தானே?
என்றும் உன் ஆருயிராய்
உனக்குள்ளே நானிருப்பேன்.
மீதமும் நீ சொல்லிவிடு
நான் நோக்கும் நல்வார்த்தை.
முத்தாய்ப்பாய் இக்கவிதை
முழுமை பெற அவ்வார்த்தை…
காதலுடன் உனக்காய் நான்
கவிமுடிக்க காத்திருப்பேன்…
அதை முதல் முத்தாய்.
ReplyDeleteஅடுத்துதிரும் அருமுத்து
என்னவென்று நானறிவேன்.
தொடர்ந்து தமிழ் பணி சிறக்க வாழ்த்துக்கள் .