Wednesday, September 14, 2011

Wednesday, September 7, 2011

Saturday, August 20, 2011

பனித்துளிகள்...


.
பனித்துளிகள்...

செவ்விதழ் மேல்
பன்னீராய் படர்ந்திருக்கும்
பனித்துளிகள்

காண்பதற்கு தனிஅழகு
யாரறிவார் இதழ்களவை
எதிர்வரும் தன் உதிர்வுக்காய்

தான் கொண்ட துயரத்தால்
சிந்திய கண்ணீரே
வெண் முத்துக்களாய்.....

Thursday, December 16, 2010

நிலவின் நிழல்

பெண்மரம்

கரை சேராப் படகு


கரை சேரா படகானதடி
என் நெஞ்சம், கண்ணே உன்
கண்களைக் கண்டதனால்…….
கரையைச் சேருமா?
இல்லை
கடல் கொண்டு போகுமா?
காத்திருக்கிறேன் உனக்காக
காலமெல்லாம் அன்பே உன்
விழிக்கணையைத் துடுப்பாக்கி
காதல் எனும் படகேறி
கடல் நீந்த, கரை சேர,
களிப்பாக..
_____________________________________________
கருவறை விட்டு
வெளி வந்தோம்
எங்கள் தாயின்
கண்ணீருடன்…!
கடவுள் எழுதிய
விதி எழுத்தில்
வியர்வைத் துளிகளே
வழி முழுதும்…!
இமைகள் மூடுகையில்
அமைதி எங்கள் வாழ்வில்
விழிகள் திறந்து கொண்டால்
விடியலில் வேதனைகள்…!
வியர்வைத் துளிகளால்
கண்ணீர்த் துளிகள்
மறைந்து போகும்
நம்பிக்கையில் நாங்கள்..!
பொழுதெல்லாம் மெய் வருத்தி
உழைக்கின்றோம் துடிக்கின்றோம்
ஆனாலும் அன்றாடம்
எம் வாழ்க்கை.
கரை சேரா படகுகளாய்
கவலைகளின் கடல் நடுவே…!